தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி


கள்ளக்குறிச்சி, ஜன. 11: கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் விழுப்புரம் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை நகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்தோடு பார்வையிட்டனர். புகைப்படக் கண்காட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படங்கள் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம்  அமைக்கப்பட்டு இருந்தது. கண்காட்சியில் அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு, அம்மா குடிநீர் ஆகியவை திறப்பு விழா உள்ளடங்கிய புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.     விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மணிமண்டபம், கால்நடை பராமரிப்பு ஆராய்ச்சி மையம் திறப்பு விழா, விக்கிரவாண்டி, சின்னசேலம் புதிய தாலுகா திறப்பு விழா புகைபடங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இப்புகைப்பட கண்காட்சியை வணிகர்கள், வியாபார மக்கள், அரசியல் பிரமுகர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன்  பார்வையிட்டனர்.

× RELATED விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய...