பைக் விபத்தில் வாலிபர் பலி

உளுந்தூர்பேட்டை, ஜன. 11:  கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் வெங்கடேசன். சம்பவத்தன்று இரவு இவர் ஒரு பைக்கில் உளுந்தூர்பேட்டை நோக்கி திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தார். ஆசனூர் சிட்கோ தொழிற்பேட்டை அருகில் வந்த போது திடீரென நிலை தடுமாறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

× RELATED கார் மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி