திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம், ஜன. 11:  விழுப்புரம் சட்டமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.
அவை தலைவர் ராதாமணி எம்எல்ஏ தலைமை தாங்கினார். பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் தமிழன் பிரசன்னா, மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் பொன்முடி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கிராமசபை கூட்டங்களை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி எனது தொகுதியில் நான் சென்று வருகிறேன். தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் நிலை உள்ளது. இதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சரியான முறையில் பயன்படுத்தினால் பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றார்.  

முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், துணை செயலாளர் முத்தையன், இளைஞரணி தினகரன், தொண்டரணி கபாலி, அமரஜி, அரசு ஒப்பந்ததாரர் மணிகண்டன், லாரி உரிமையாளர் சங்கம் ஏழுமலை, பொறியாளர் அணி இளங்கோ, பாரத், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, கல்பட்டுராஜா, வழக்கறிஞர் சுவைசுரேஷ், வளவனூர் நகர செயலாளர் ஜீவா, மகளிர் அணி துணை செயலாளர் பிரியங்கா, விழுப்புரம் நகர செயலாளர்
சக்கரை, துணை செயலாளர்கள் சோமு, புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED பிரதமரிடம் திமுக மனு