×

பிளஸ் 2 மட்டுமே படித்துவிட்டுஆங்கில மருத்துவம் பார்த்த 3 போலி டாக்டர் கைது

தண்டராம்பட்டு, ஜன.11: திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 படித்துவிட்டு, நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த 3 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்து சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன்(60). பிளஸ் 2 மட்டுமே படித்துள்ள இவர் அதே பகுதியில் கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பாண்டியனுக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின்பேரில், தண்டராம்பட்டு மருத்துவ அலுவலர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள், ேநற்று முன்தினம் சம்பந்தப்பட்ட கிளினிக்கில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு இளங்கோவன் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்துவந்தது தெரிந்தது. இதையடுத்து, அங்கிருந்த ஊசிகள், ஆங்கில மருந்து, மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மருத்துவ அலுவலர் பிரகாஷ் சாத்தனூர் அணை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து இளங்கோவனை கைது செய்தனர். அதேபோல், செங்கம் பகுதிகளில் போலி டாக்டர்கள் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை வருவதாக திருவண்ணாமலை எஸ்பி சிபிசக்கரவர்த்திக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின்பேரில், டிஎஸ்பி குத்தாலிங்கம் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் செங்கம் பகுதிகளில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, பிளஸ் 2 மட்டுமே படித்துவிட்டு தனது வீட்டில் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்ததாக, செங்கம் டவுன் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ஜோசப்(46), மேல்புழுதியூர் கிராமத்தை சேர்ந்த சங்கர்(44) ஆகிய இருவரையும் செங்கம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, போலி டாக்டர்கள் 3 பேரும் செங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 3 போலி டாக்டர்கள் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : doctor ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...