ரேஷன் கடையில் தாசில்தார் திடீர் ஆய்வு

திண்டிவனம், ஜன. 10: திண்டிவனத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கிடங்கல்-1 பகுதியில் 24வது வார்டில் உள்ள நியாய விலைக்கடையில் வட்டாட்சியர் பிரபு வெங்கடேஸ்வரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 பொதுமக்களுக்கு சரியாக சென்று சேர்கிறதா என கேட்டறிந்தார். அப்போது முன்னாள் நகர மன்ற உறுப்பினர் விஜயகுமார், கிடங்கல் பகுதி கிராம நிர்வாக அலுவலர் உமாசங்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

× RELATED கடமலைக்குண்டில் ரேஷன் கடையை கண்டித்து மறியல்