5 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி விஏஓக்கள் 2வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்

ஆத்தூர், டிச.12: பெத்தநாயக்கன்பாளையத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, 2வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், 50 சதவீகித பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளவர்களில் அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரிய, மாவட்ட மாறுதல் கோருதல், கருவறை முதல் கல்லறை வரை வரக்கூடியது அலுவலகம் விஏஓ அலுவலகம். அந்த அலுவலகத்தில் மின்வசதி, கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகிறோம்.

பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய சான்றுகள் அனைத்தையும், இணைய வழியில்  சொந்த செலவில் வழங்கி வருகிறோம். எனவே, இணைய வசதி செய்து தர வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை தேடி என்கிற காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இதனை முன்னிட்டு, தாலுகா அலுவலக இ-சேவை மையம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு வருகை தந்த, பொதுமக்களை சந்தித்து தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஆத்தூர் வட்டார தலைவர் ரகுபதி, கோட்ட செயலாளர் சக்திவேல், கெங்கவல்லி பெரியண்ணன், பெத்தநாயக்கன்பாளையம் அனைமுத்து, பொருளாளர் ஞானவேல், செயலாளர்கள் நல்லவர், முத்தையன், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் உள்பட 50க்கும் மேற்பட்ட விஏஓக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி, இளம்பிள்ளையில் போராட்டம் நடைபெற்றது. அங்குள்ள மாரியம்மன் கோயில் அருகே நடைபெற்ற போராட்டத்தின்போது கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுக்களிடம் விநியோகித்து ஆதரவு திரட்டினர்.

Related Stories: