×

சோமனஅள்ளி அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி

பென்னாகரம், டிச.11: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சோமனஅள்ளி ஊராட்சி வைரன்கொட்டாய் பகுதயில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர் .இப்பகுதி மக்களின் குடிநீர் வசதிக்காக நல்லம்பள்ளி ஒன்றியத்தின் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் டேங்க் வைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் ஆழ்துளை கிணறானது பழுதடைந்ததால், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன. அவ்வாறு அமைக்கப்பட்ட குழாயானது குடியிருப்பு பகுதிகளில் அமைக்காமல் பென்னாகரம்-தர்மபுரி செல்லும் சாலையோரங்களில் அமைக்கப்பட்டதால் மக்கள் அன்றாட தேவைக்காக குடிநீர் எடுக்க சாலையை கடக்கும் அவல நிலை உள்ளது. அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர்கள் குடிநீருக்காக சாலையை கடக்கும் போது விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

மக்கள் கூறுகையில்: வைரன் கொட்டாய் பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறானது பழுதடைந்ததால், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் குடிநீருக்காக சாலையை கடப்பதால், சில நேரங்களில் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. நல்லம்பள்ளி பிடிஓ இதற்கான நடவடிக்கையை எடுத்து குடியிருப்பு பகுதியில் குடிநீர் குழாய்கள் அமைத்தும், முறையாக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Tags : drinking water shortage ,Chaman Malli ,
× RELATED குன்னூர் வைகை ஆற்றில் உறைகிணறுகளில்...