3.16 கோடியில் அமைக்கப்பட்ட 5 புதிய பூங்காக்கள் திறப்பு

ஆவடி: ஆவடி நகராட்சி பகுதியில் 3.16 கோடியில் 5 இடங்களில் அமைக்கப்பட்ட புதிய பூங்காக்கள் திறக்கப்பட்டது. ஆவடி நகராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் 5 பூங்கா அமைக்கும் பணிக்காக 3.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், அந்தோணி நகர், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, லாசர் நகர், பாலாஜி நகர், ராம் நகர் ஆகிய பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டது. இந்த பூங்காக்களில் நடைபாதை,   குழந்தைகளுக்கான நவீன விளையாட்டு உபகரணங்கள், எழில்மிகு பசுமை தோட்டங்கள்,  இருக்கைகள், மின்விளக்குகள், நீரூற்றுக்கள் கண்காணிப்பு கேமராக்கள் ஆகிய  உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கான பணிகள் நிறைவடைந்து திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ஜோதிகுமார் அனைவரையும் வரவேற்றார். ஆவடி தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான க.பாண்டியராஜன் கலந்துகொண்டு ஐந்து பூங்காக்களையும் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம், ஆவடி தாசில்தார் சரவணன், நகராட்சி பொறியாளர் வைத்திலிங்கம், உதவி பொறியாளர்கள் சங்கர், சத்தியசீலன், சுகாதார அலுவலர் மோகன், சுகாதார ஆய்வாளர்கள், ஊழியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: