×

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாலை தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

உடுமலை,டிச.11: திருப்பூர் மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் நேற்று காலை உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பாக 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி,மாவட்ட பொது செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, பஞ்சாலை தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலைக்கு ரூ.700 வழங்க வேண்டும். அனைத்து பிரிவுகளிலும் பயிற்சியாளராக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.430.20 வழங்கிட வேண்டும். பஞ்சாலை தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் பென்ஷன் வழங்கிட வேண்டும்.
480 நாள் பணியாற்றியவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மாநிலம் முழுவதும் பணியாற்றிடும் பஞ்சாலை தொழிலாளர்களுக்கு பி.எப்.,இ.எஸ்.ஐ உள்பட தொழிலாளர் நலசட்டங்களை அமல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர்களின் ஊதிய கோரிக்கை மற்றும் அனைத்து கோரிக்கைகள் அதன் பேரில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பழனிச்சாமி, ஜெயப்பிரகாஷ்,ரமேஷ் உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Panchali Workers Demonstration ,
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்