நிர்வாகி மீது பொய் வழக்கு போடுவதா? கரூரில் வி.சி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கரூர், டிச. 4: கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட நெறியாளர் நாவரசு, மாவட்ட நிர்வாகி அகரமுத்து உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் விசிக நிர்வாகி ஒருவர் மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: