×

சேலம் வக்கீல் சங்க பொதுக்குழு கூட்டம்

சேலம், நவ.15: சேலம் வக்கீல் சங்க நிர்வாகிகள் தேர்தலை ஜனவரி 11ம்தேதி நடத்துவது என பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சேலம் வக்கீல் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், தலைவர் பொன்னுசாமி தலைமையில் நடந்தது. தலைமை தேர்தல் அதிகாரி மணிவாசகம், துணைத்தேர்தல் அதிகாரிகள் சரவணக்குமார், பிரதீப் சந்திரன், ராஜா, மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் டிசம்பர் மாதம் 21ம்தேதி தேர்தல் நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் யாருக்கெல்லாம் ஓட்டுரிமை வழங்குவது என்பது குறித்தும் விரிவாக ஆலோசனை ேற்கொள்ளப்பட்டது.

டிசம்பர் 21ம்தேதி வாக்குபதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்ட தேதியை மாற்ற வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ேதர்தல் அதிகாரியான மணிவாசகம் கூறுகையில், ‘சேலம்  வக்கீல் சங்கத்தின் சட்டவிதிகள் படியும், பார் கவுன்சில் விதிகளை கடைபிடித்தும் ஓட்டுரிமை வழங்கப்படும். வாழப்பாடி வக்கீல்கள் ஓட்டுப்போடலாம். வெளியூர் வக்கீல்கள் வாக்களிக்க முடியாது. அவர்கள் சேலத்தில் தொழில் செய்யும் செய்து, சேமநல நிதி செலுத்துபவராக இருந்தால் ஓட்டு போடலாம். அகில இந்திய பார் கவுன்சில் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜனவரி மாதம் 11ம்தேதி ேதர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,’ என்றார். இதில் சங்க செயலாளர் அய்யப்பமணி, துணைத்தலைவர் பொன்.ரமணி, பொருளாளர் தர் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags : Salem ,lawyer union ,body meeting ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...