×

பிஎஸ்என்எல் அன்லிமிடெட் மொபைல் பிரிபெய்ட் திட்டங்கள்

நாகர்கோவில், அக்.18: நாகர்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் சஜிகுமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: பிஎஸ்என்எல் மிக குறைந்த தினசரி கட்டண விகிதங்களில் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புக்கள் மட்டும் உள்ள பிரிபெய்ட் பூஸ்டர்களையும், அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டேட்டா வசதி உள்ள பிரிபெய்ட் திட்டங்களையும் கொண்டுள்ளது. சிறப்பு சலுகையாக அனைத்து மொபைல் பிளான்கள் மற்றும் பூஸ்டர்களோடு ஒரு நாளைக்கு எக்ஸ்ட்ராவாக 2.2 ஜிபி அளவுக்கு டேட்டா பயன்படுத்தும் வசதியை பி.எஸ்.என்.எல் நவம்பர் 14 வரை அறிவித்துள்ளது.பிளான்-429 ல் ஏற்கனவே நாளொன்றுக்கு 1 ஜிபி அளவுக்கு இலவச டேட்டா பயன் படுத்தும் வசதி உள்ளது. இத்துடன் சிறப்பு சலுகை எக்ஸ்ட்ரா டேட்டா 2.2 ஜிபி யை சேர்த்து பிளான்-429 வாடிக்கையாளர் தினமும் 3.2 ஜிபி அளவுக்கு டேட்டா பயன்படுத்த முடியும். தரைவழி பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கான டெய்லி ஜிபி டேட்டா வசதியுடன் புதிய அன்லிமிடெட் கோம்போ திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பு அம்சமாக அனைத்து திட்டங்களிலும் 24 மணிநேரமும் இலவச வாய்ஸ் அழைப்புக்கள் இந்தியா முழுவதும் பேசும் வசதி உண்டு.பி.எஸ்.என்.எல் உயர் வேகத்திலான இன்டர்நெட் சேவைகளை ஆப்டிகல் பைபர் டெக்னாலஜி  மூலம் பைப்ரோ காம்போ யுஎல்டி 777 மற்றும் ஃபைப்ரோ காம்போ யுஎல்டி1277 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பிளான்களில் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புக்கள் உண்டு.

குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து இல்லங்களையும் அதிவேக கண்ணாடி இழை இன்டர்நெட் சேவை வாயிலாக இணைக்க பி.எஸ்.என்.எல் உறுதி பூண்டுள்ளது. பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தினை கருத்தில் கொண்டு பி.எஸ்.என்.எல் சிறப்பு மொபைல் பூஸ்டர்- 78ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த பூஸ்டரை பயன் படுத்தி 10 நாட்களுக்கு அன்லிமிடெட் ஆக வாய்ஸ், வீடியோ அழைப்புகள் பேசும் வசதியுடன் தினமும் 2 ஜிபி அளவுக்கு டேட்டாவும் உபயோகப்படுத்தலாம். மாத வாடகையாக ₹399க்கு மேல் செலுத்தும் பி.எஸ்.என்.எல் மொபைல் போஸ்ட் பெயிட் வாடிக்கையாளர்களுக்கும் மேலும் ₹745க்கு மேல் செலுத்தும் பி.எஸ்.என்.எல் லேன்ட் லைன், பிராட்பேன்ட் மற்றும் கண்ணாடி இழை வாடிக்கையாளர்களுக்கும் ₹999 மதிப்புள்ள ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் பேக்கேஜ் இலவசம். இதற்காக வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல் இணையதளத்தில் சென்று பதிவு செய்திடலாம்.

Tags : BSNL ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...