ஓசூரில் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து அனைத்து சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

ஓசூர், அக்.17: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழிலாளர் விரோத போக்கை மேற்கொள்ளும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் பீட்டர், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் மாதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுத்துறை நிறுவனங்களை மத்திய, மாநில அரசுகள் அழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொழிற்சங்க இயக்கங்களை சிறுமைப்படுத்துவதை கண்டித்தும், ஒப்பந்த முறை, அவுட்சோர்சிங்,

முத்தரப்பு குழுக்கள் உடனடியாக அமைப்பது, போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை கையாடல் செய்தது உள்ளிட்டவற்றுக்கு எதிராகவும், மின்வாரிய ஊழல் தொடர்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட கவுன்சில் துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, போக்குவரத்து கழக மத்திய சங்க செயலாளர் மனோகரன், ஓசூர் பணிமனை செயலாளர் சோமசுந்தரம், தொமுச மாவட்ட தலைவர் சீனிவாசப்பா, அமைப்பு சாரா தொமுச கோவிந்தராஜ், சிவண்ணா, ரமேஷ், முனிராஜ், ஏஐடியுசி மாவட்ட துணைத்தலைவர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: