×

கழிவு நீரால் சுகாதார சீர்கேடு

திருப்பூர், அக்.16: திருப்பூர் ஐஸ்வர்யா நகரில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி 52வது வார்டுக்கு உட்பட்ட பலவஞ்சிபாளையம், ஐஸ்வர்யா நகர் 2வது வீதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகளை சுற்றிலும் ஏராளமான சிறு, சிறு குட்டைகள் உள்ளன. இங்கு பல இடங்களில் மழை நீருடன், கழிவு நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் குப்பைகள் அகற்றப்படாமல் மலைபோல் குவிந்துள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதாகவும், குழந்தைகள் அதிகமாக பாதிப்பதாகவும் மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும், கூறுகையில், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் மழை நீருடன் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதேபோல், பல இடங்களில் பாக்ஸ் இல்லாததால் குப்பை ரோட்டோரத்தில் கொட்டப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை உரிய நடவடிக்கை இல்லை. திருப்பூரில் வைரஸ் காய்ச்சலுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், உடனடியாக தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்