×

குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிப்பு புத்தன் அணையில் 27 மி.மீ. மழை

நாகர்கோவில், அக்.16: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. நேற்றும் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. நேற்று முழுவதும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 27.20 அடியாக இருந்தது. அணைக்கு 494 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 654 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 70.20 அடியாகும். அணைக்கு 292 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

சிற்றார் 1ல் 15.71 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 21 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார் 2ல் 15.81 அடியாக நீர்மட்டம் காணப்படுகிறது. அணைக்கு 27 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. பொய்கையில் 25.70 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 54.12 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது. மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக புத்தன் அணை பகுதியில் 27.2 மி.மீ மழை பதிவாகி இருந்தது. பெருஞ்சாணி 26.6, சிற்றார் 2ல் 4, மாம்பழத்துறையாறு 7, அடையாமடை 17, திற்பரப்பு 19.2, கன்னிமார் 5.2 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.

Tags : Kumari ,district ,rainfall ,dam ,Putan ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...