×

பணகுடி கோயிலில் பராமரிப்பின்றி பட்டுப்போன மாமரம்

பணகுடி, அக். 16:   பணகுடி சிவகாமி அம்பாள் சமேத ராமலிங்க சுவாமி கோயிலுக்கு தினமும்  நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசித்து செல்கின்றனர். முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள்  நடைபெறுவதும், இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பதும் வழக்கம்.
  இக்கோயிலின் உட்புறம் இடதுபக்கத்தில் உள்ள 80 ஆண்டுகள் பழமையான மா மரம், முறையான பராமரிப்பின்றி கடந்த 3 ஆண்டுகளுக்கு பட்டுப்போனது. தற்போது அந்த மரத்தில் இருந்து அவ்வப்போது ஏராளமான கிளைகள்  முறிந்து விழுகின்றன. இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. இருந்தபோதும் இதுவரை எந்தவித அசம்பாவிதங்களும்  நடக்கவில்லை. ஆனாலும் இந்த மா மரம் மிகவும்உயரமாக இருப்பதால் தற்போது  பக்தர்கள் கொஞ்சம் இடது பக்கம் செல்ல தயக்கம் காட்டிவருகின்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘‘தற்போது தசரா திருவிழா சீசன் என்பதால், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு செல்லும் ஏராளமான பக்தர்கள் இங்கும் வருகைதந்து சுவாமி, அம்பாளை தரிசித்து செல்கின்றனர். அத்துடன் தை மாதம் பிரசித்திபெற்ற 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.
எனவே, அதற்கு முன்பாக ஆபத்தான நிலையில் உள்ள இந்த பட்டுமரத்தை அகற்ற வேண்டும். அதற்கான நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும். இதுவே அனைவரது எதிர்பார்ப்பு’’ என்றனர்.

Tags :
× RELATED டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது