கறிவேப்பிலையின் நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

நமது உணவு பாரம்பரியத்தில்  தவிர்க்க  முடியாத  பொருளாக  பெரும்பாலான  உணவுகளில்  சுவை மற்றும் வாசனைக்காக  சேர்க்கப்படுவது  கறிவேப்பிலை. ஆனால்  கறிவேப்பிலை  நறுமண மூலிகை  மட்டுமல்ல. ஏராளமான  ஆரோக்கிய நன்மைகளையும்  கொண்டுள்ளது. எனவே,  கறிவேப்பிலையை துச்சமென  எண்ணி  தூக்கியெறியாமல்,  உணவுடன் சேர்த்து உண்ணும் பழக்கத்தை  மேற்கொள்ளுவோம்.  ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

கறிவேப்பிலையில்,  கால்சியம், கார்போஹைட் ரேட்,  ஃபைபர்,  பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து  மற்றும்  வைட்டமிகள்  என பல  அத்தியாவசிய  ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால்,  அது நல்ல இருதய செயல்பாட்டிற்கும், நோய் எதிர்ப்பு சக்தியாகவும் திகழ்கிறது. மேலும், கறிவேப்பிலையில் இரும்புச் சத்தும், ஃபோலிக் அமிலமும் அதிகளவு இருப்பதால், உடலில் ரத்த சோகையை அண்ட விடாமல் தவிர்க்கிறது. தலைமுடி மற்றும் தோல் ஆகியவற்றை பொலிவுடன் இருக்க உதவுகிறது.

நீரிழிவுக்கு உதவும்  கறிவேப்பிலை

தினசரி  உணவில் கறிவேப்பிலை சேர்ப்பதன் மூலம், அது நமது   உடலுக்குத் தேவையான  இன்சுலினை உற்பத்தி  செய்து,  ரத்தத்தில்  சர்க்கரை  அளவை  குறைத்து கட்டுக்குள் வைக்க உதவுகிறது.  

வயிற்றுக்  கோளாறுகளை  போக்கும்

செரிமான  அமைப்புகள்  சிறப்பாக  செயல்பட   கறிவேப்பிலை உதவுகிறது. எனவே, வயிறு  சார்ந்த  பிரச்னைகளை  குணப்படுத்தவும்  கறிவேப்பிலை பயன்படுகிறது. குறிப்பாக, கறிவேப்பிலையை  வெறும்  வயிற்றில்  சாப்பிடுவதால்  செரிமான  நொதிகளைத்  தூண்டி  குடல் இயக்கம்  சீராக இருக்க உதவுகிறது.  மலச்சிக்கலைப்  போக்குகிறது.  இதில் உள்ள கார்பசோல்  ஆல்கலாய்ட்ஸ்   வயிற்றுப் போக்கை  குணப்படுத்தும்  பண்புகளை கொண்டுள்ளன.

கொலஸ்ட்ராலை  கட்டுப்படுத்தும்

ரத்தத்தில்  உள்ள  கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்  நிறைந்த  கறிவேப்பிலை  உதவுகிறது.  இது  ஃப்ரீரேடிக்கல்ஸ்களால்   கொலஸ்ட்ரால் ஆக்ஸிடேஷனை  தடுப்பதன்  மூலம் கெட்ட  கொழுப்பு  எனப்படும் எல் டிஎல்  கொலஸ்ட்ரால்  உருவாவதை  தடுக்கிறது.  இதனால்  எச்.டி.எல்.  எனப்படும்  நல்ல கொலஸ்ட்ரால் அளவை  அதிகரிக்க  கறிவேப்பிலை  உதவுகிறது.

 

எடையை குறைக்க உதவும்

தீங்கு  விளைவிக்கும்  நச்சுகளை உடலிலிருந்து  சுத்தப்படுத்துவதோடு,  கலோரிகளை  எரித்து கொழுப்பு  சேர்வதையும் தடுத்து, உடல் எடையை சீராக பராமரிக்க  உதவுகிறது.

இளநரையை  தடுக்கிறது

கறிவேப்பிலை  இளநரையை  தடுக்க  மற்றும்  முடி  நரைப்பதை  தாமதப்படுத்தவும்  உதவுவதோடு  மட்டுமல்லாமல்  பொடுகு  பிரச்னை  மற்றும் முடிசேதத்தையும் சரி  செய்கிறது.  மயிர்கால்களை  வலுவாக்கி  முடி  உதிர்வை கணிசமாக  குறைக்கிறது.

தொகுப்பு : கவிதா பாலாஜிகணேஷ்

Related Stories: