நலம் தரும் ஸ்பைருலினா!

நன்றி குங்குமம் டாக்டர்

ஸ்பைருலினாவைப் பற்றி விளம்பரங்களில் பெரும்பாலும் பார்த்திருப்பீர்கள். டயட்டை குறைக்கும் மாத்திரை வகைகளில் விளம்பரங்களில் ஸ்பைருலினாவைப் பற்றி பேச்சு வராமல் இருக்காது.அப்படியென்ன அந்த ஸ்பைருலினாவில் இருக்கிறது. அது எதனால் ஆனது என சந்தேகங்கள் உங்களுக்கு வந்திருக்கிறதா? அதனை யாரும் சாப்பிடலாமா? எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாமா என்று கேள்விகள் உங்கள் மனதில் எழுகிறதா?

ஸ்பைருலினா என்றால் என்ன?

ஸ்பைருலினா ஒரு பாசி வகை சேர்ந்தது. ஈரப்பதத்தில் வளரக் கூடியது. இது மிகவும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பி கடற்பாசி வகையை சேர்ந்தது. விளையாட்டு வீரர்களுக்கு தேவையான எல்லா சத்துக்களையும் கொண்டது.நீங்க நினைத்ததை விட எடையை வேகமாக குறைக்க இந்த பழங்கள் அல்லது காய்கறி சாறுகளில் ஒன்றை தினமும் குடித்தால் போதும்.சத்துக்கள் : அதில் விட்டமின் பி, சி, டி, ஈ போன்ற விட்டமின் சத்துக்கள் அதிகம் இருக்கின்றது. இதில் முக்கியமாக குளோரோஃபில் அதிகம் காணப்படுகிறது. அதிக புரதமும் இருக்கின்றது. இது பல்வேறு உடல் கோளாறுகளை குணப்படுத்தும் அளவிற்கு பெரும் ஆற்றல் கொண்டது.

பலன்கள் :
ஜீரண சக்தி மேம்படும், இதயம் மற்றும் எலும்புகளைக் காக்கும், ப்ரீரேடிக்கல்ஸைக் கட்டுப்படுத்தும், கொழுப்பைக் கரைக்கும், ரத்தசோகையைப் போக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும். உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கும். ஆரோக்கியம் மேம்படும். சத்து கிடைக்க : உடலுக்கு தேவையான சத்துக்கள் கொண்ட இந்த ஸ்பைருலினாவை சத்து மாத்திரையாக சாப்பிட நினைத்தால், ஸ்மூத்தி மற்றும் பழச்சாறுகளில் கலந்து சாப்பிடலாம். இதனால் சத்துக்கள் முழுமையாக உங்களால் பெற முடியும்.

பரிந்துரைக்கப்படும் அளவு : பொதுவாக ஒரு நாளைக்கு 500 மி.கி அளவு எடுத்துக் கொள்ளலாம். முதலில் ஆரம்பிக்கும்போது குறைந்த அளவிலிருந்து சாப்பிட வேண்டும். இதனை சாப்பிடும் போது அதிக அளவில் நீரை குடிக்க வேண்டும்.

தொகுப்பு : சரஸ்

Related Stories: