தோகைமலை அருகே குளத்தில் மதுபானம் பதுக்கி வைத்து விற்றவர் கைது

தோகைமலை, அக். 10: தோகைமலை அருகே குளத்தில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் தோகைமலை வேதாசலபுரத்தை சேர்ந்தவர் தங்கமணி(53). இவர் நல்லாகவுண்டம்பட்டியில் உள்ள குளத்தில் அனுமதியின்றி மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். தகவலறிந்த போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தங்கமணி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து பதுக்கி வைத்திருந்த மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் தங்கமணியை கைது செய்தனர்.

Related Stories: