×

வடக்குதாமரைகுளம் முத்தாரம்மன் வெயிலுகந்தம்மன் கோயில் ஆடி செவ்வாய் சிறப்பு விழா

நாகர்கோவில், ஆக. 14: வடக்குதாமரைகுளம் முத்தாரம்மன் வெயிலுகந்தம்மன் கோயில் ஆடி செவ்வாய் சிறப்பு விழா கடந்த 7ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8ம் திருவிழாவான இன்று(14ம் தேதி) காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, 9 மணிக்கு ஏழகரம் பெருமாள் கோயில் மற்றும் மருங்கூர் சுப்பிரமணியசுவாமி கோயில்களில் இருந்து சந்தனகுடம் எடுத்து வடக்கு தாமரைகுளம் சாஸ்தான் கோயில் சன்னதி வந்தடைகிறது. 10.30 மணிக்கு முத்தா–்ரம்மன் கோயில் நேர்ச்சை பொருட்கள் பெற்றுக் கொள்ளப்படுகிறது.1 மணிக்கு முன்னுதித்த அம்மன் மற்றும் முத்து வைரவர் சமேத முத்தாரம்மன், ஈஸ்வரியம்மன், உச்சினி மாகாளியம்மன் ஆகியோருக்கு சிறப்பு ்பூஜை நடைபெறுகிறது. 3 மணிக்கு வேதாள வாகனத்தில் மலர் அலங்காரத்துடன் தேவி எழுந்தருளல். தேவிக்கு சிறப்பு பூஜையுடன் ஏழகரம் பெருமாள் கோயில், மருங்கூர் சுப்பிரமணியசுவாமி கோயில் சந்தன குடத்துடன் யானை முன் செல்ல வடக்குதாமரைகுளம், நடராஜபுரம் அம்மன் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. 9 மணிக்கு பழைய அளம் வெயிலுகந்தம்மன் கோயில் சென்றடைகிறது.

இரவு 9.15 மணிக்கு அன்னதானம், 9.30 மணிக்கு வெயிலுகந்தம்மனுக்கு சிறப்பு பூஜை, இரவு 12 மணிக்கு முழுகாப்புடன் அர்த்தசாம சிறப்பு பூஜை, 4 மணிக்கு மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை ஆகியவை நடக்கிறது.21ம் தேதி மதியம் வெயிலுகந்தம்மனுக்கு பழைய அளத்தில் சிறப்பு பூஜை நடக்கிறது.


Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...