×

தொடர் மழையால் முழு கொள்ளளவை நெருங்கியது பெருஞ்சாணி அணையில் 3000 கன அடி திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

குலசேகரம், ஆக. 14: தொடர் மழையால் பெருஞ்சாணி அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ள நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை பரவலாக பெய்தது. மே கடைசி வாரம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி ெதாடர்ந்து சாரல் மழையாகவும், கனமழையாகவும் பெய்து வருகிறது. இதனால் அணைகள் உள்பட நீர்நிலைகள் நிரம்பி உச்சபட்ச கொள்ளளவை எட்டியுள்ளன. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் நேற்று காலை நீர்மட்டம் 75.80 அடியாக இருந்தது.அணைக்கு 631 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் மட்டம் அபாய கட்டத்தில் இருப்பதால் நேற்று மறுகால் திறக்கப்பட்டு வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மதியம் நீர் திறப்பு 1500 கனஅடியாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மாலையில் உள்வரத்து 1600 கன அடியாகவும்,  நீர்மட்டம் 76 அடியை தாண்டியதாலும் தண்ணீர் திறப்பு 2000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.  இரவில் நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து மறுகால் வழியாக 3000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.இதனால் பரளியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வலியாற்றுமுகம், மலவிளை, திருவட்டார், ஆற்றூர், மூவாற்றுமுகம், குழித்துறை உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தின் முக்கிய அணையான பேச்சிப்பாறையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் அதிகளவு தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் மேல் கோதையாறு, கீழ் கோதையாறு அணைகளில் இருந்து மறுகால் தண்ணீர் அதிகளவு வந்துகொண்டிருக்கிறது. இதனால் தற்போது பேச்சிப்பாறை அணையில் இருந்து 750 கன அடி தண்ணீர் பாசன கால்வாய் வழியாக புத்தன் அணைக்கு திருப்பி விடப்பட்டு, அங்கிருந்து 150 கனஅடி வீதம் பரளியாற்றில் திறந்து விடப்படுகிறது.பரளியாற்றில் ஏற்கனவே மழை தண்ணீர் ஓடும் நிலையில் பேச்சிப்பாறை அணை தண்ணீரும் சேர்வதால் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் சிற்றாறு 1 அணையில் 135 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து சிற்றாறு 1 அணையில் மதகு திறக்கப்பட்டு 260 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 6 நாட்களாக திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ெதாடர் மழை காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ெபருஞ்சாணி அணையில் இருந்து மறுகால் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும், விளை நிலங்களுக்கும் பெரும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.தொடர் மழை காரணமாக குமரி மாவட்டத்தின் முக்கிய தொழில்களான ரப்பர் பால் வடித்தல், செங்கல் தயாரிப்பு, கட்டுமானம் உள்ளிட்ட தொழில்கள் முடங்கியுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

251.20 மி.மீட்டர் பதிவு
குமரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் பாலமோரில் அதிகபட்சமாக 36 மி.மீ மழை பதிவாகி இருந்தது.  நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 21.70 அடியாக இருந்தது. பெருஞ்சாணி அணையில் 76.00 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. சிற்றார்-1ல் 15.54 அடியாக நீர்மட்டம் உள்ளது. சிற்றார்-2ல் 15.65 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 16.80 அடியாக நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 54.12 அடியாகும். மாவட்டம் முழுவதும் காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 251.20 மி.மீ மழை பதிவாகி இருந்தது. இது சராசரியாக 15.70 மி.மீட்டர் ஆகும்.

55 கி.மீ வேகத்தில் காற்று வீசும்
குமரி மாவட்டம் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 55 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசும். மேலும் ஆழ்கடலில் 10 முதல் 11 அடி உயரத்திற்கு ராட்சத அலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. எனவே மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது.

மழையளவு (மி.மீ)
பூதப்பாண்டி    :    8.6
சிற்றார்-1    :    17.4
களியல்    :    8.6.
கன்னிமார்    :    17.4
கொட்டாரம்    :    18.6
குழித்துறை    :    19
மயிலாடி    :    18.2
நாகர்கோவில்    :    11.4
பேச்சிப்பாறை    :    15.6
பெருஞ்சாணி    :    14.8
புத்தன் அணை    :    15.2
சிற்றார்-2    :    12.6
சுருளோடு    :    19.2
தக்கலை    :    17
குளச்சல்    :    12.6
இரணியல்    :    14.2
பாலமோர்    :    35.6
மாம்பழத்துறையாறு    :    20
கோழிப்போர்விளை    :    22
அடையாமடை    :    27
குருந்தன்கோடு    :    17.8
முள்ளங்கினாவிளை    :    32
ஆனைக்கிடங்கு    :    23.2

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...