×

மாவட்டங்களுக்குள் பணியிட மாறுதல் டாஸ்மாக் காலிப்பணியிடங்கள், பதிவுமூப்பு பட்டியல் இன்று வெளியீடு மேலாண்மை இயக்குனர் உத்தரவு

வேலூர், ஆக.14:அந்தந்த மாவட்டங்களில் பணியிட மாறுதல் தொடர்பாக டாஸ்மாக் காலிப்பணியிடங்கள், பதிவுமூப்பு பட்டியல் இன்று பொதுமேலாளர்கள் அலுவலகத்தில் ஒட்ட மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் தற்போது 4,701 டாஸ்மாக் கடைகள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகிறது. இவற்றில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஒரு கடைக்கு ஒரு மேற்பார்வையாளர், கடை விற்பனையாளர், உதவி விற்பனையாளர் என 4 ேபரும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ஒரு மேற்பார்வையாளரும், கடை விற்பனையாளர், உதவி விற்பனையாளர் என 3 ேபரும், ஊராட்சி பகுதியில் ஒரு மேற்பார்வையாளர், கடை விற்பனையாளர், உதவி விற்பனையாளர் என 3 பேரும் பணியில் உள்ளனர். மாநிலம் முழுவதும் 26 ஆயிரத்து 488 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 164 டாஸ்மாக் கடைகள் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகங்கள், மேலாளர் அலுவலகங்கள், பறக்கும்படை பிரிவு, டாஸ்மாக் கடைகளில் இருந்த பணியிடங்களில் அவர்களை பணி அமர்த்தப்பட்டனர். 174 கடைப்பணியாளர்கள் கூட்டுறவு துறையில் அமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில், அதிகளவில் டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் விற்பனை அடிப்படையில் 3 பிரிவுகளாக ஏ, பி, சி என பிரிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப ஒவ்வொரு கடைக்கும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பொதுமாறுதல் நடத்தப்படும். அதன்படி, தற்போது பொதுமாறுதல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டாஸ்மாக் கடைகளில் பணியாளர்களுக்கான பணிமாறுதல் குறித்த அறிவுரைகள் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் அனைத்து மாவட்ட மேலாளர்களும் அந்தந்த மாவட்டங்களில் காலிப்பணியிடங்களின் பட்டியல் மற்றும் பணிமூப்பு பட்டியல் தயார் செய்து அறிவிப்பு பலகையில் இன்று 14ம் தேதி பார்வைக்கு தெரியும் வகையில் ஒட்ட வேண்டும். அதற்கான அறிக்கையை 17ம் தேதி தலைமை அலுவுலகத்திற்கு அனுப்பி வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
× RELATED சர்ச் பாதிரியார் அதிரடி கைது மதமாற்றம் செய்ய முயன்றதாக பெண் புகார்