×

அரசு பள்ளியின் இடம் ஆக்கிரமிப்பு

திருப்பூர், ஆக.7: திருப்பூரில் அரசு பள்ளிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கக் பொதுமக்கள் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.இதுகுறித்து பூலுவபட்டி பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி 2 வது மண்டலத்திற்குட்பட்ட பூலுவபட்டி அரசு துவக்கப்பள்ளிக்கு அருகில் உள்ள இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து போலி ஆவணம் தயாரித்து கடைகள் கட்டி வாடகை வசூல் செய்து வருகின்றனர். இதுகுறித்து கேட்டபோது பூர்வீக சொத்து என கூறுகின்றனர். இதுதொடர்பாக, திருப்பூர் வடக்கு வட்டாட்சியரிடம் மனு அளித்தோம், அவர் ஆய்வு செய்த போது அது அரசுக்கு சொந்தமான இடம் என தெரியவந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு செய்தவர்களை காலி செய்ய உத்தரவிட்டார். ஆனால், இதுவரை இடத்தை காலி செய்யவில்லை. ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு அரசு பள்ளிக்கு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்