×

பத்ம விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

நாகா்கோவில், ஜூன் 20: பத்ம விருதுகள் பெற வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் இரண்டாம் பெரிய விருதான பத்ம விருதுகள் இந்திய அரசால் வழங்கப்படவுள்ளன. அதற்கான விண்ணப்பத்தினை www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விளையாட்டுதுறையில் சிறந்த சாதனை புரிந்த சாதனையாளர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மாவட்ட கலெக்டரின் ஒப்புதலோடு வரும் 30ம் தேதிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை 84 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட இரண்டு நகல்களை நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.



Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...