அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாது

சட்டப்பேரவையில் நேற்று பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மதுரை வடக்கு கோ.தளபதி (திமுக) பேசும்போது, “திருப்பரங்குன்றம் கோயில் நிலத்தில் 200 ஆண்டு காலமாக 5 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்” என்றார். அதற்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக்கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அவர்களை கோயில் வாடகைதாரராக வேண்டுமானால் வகை மாற்றம் செய்யலாம். பட்டா வழங்க முடியாது” என்றார்.

Related Stories: