மாமல்லபுரம் அருகே கடலில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள்: பொரிப்பகம் அமைக்கவும் கோரிக்கை

மாமல்லபுரம்: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஆமைகளின் இனப்பெருக்ககாலம். இதில், தமிழகம் முழுவதும் கடலோர மீனவ குப்பங்களில் ஆமைகள் முட்டை இட்டுச்செல்வது வழக்கம். இதில், குறிப்பாக மாமல்லபுரம், வெண்புருஷம், கொக்கிலமேடு, தேவனேரி உள்ளிட்ட குப்பங்களில் ஆமைகள் அதிகளவில் முட்டையிட்டு கடலுக்கு சென்று விடும். பின்னர், கரை திரும்பும் ஆமைகள், குஞ்சு பொறித்த பிறகு குஞ்சுகளை கடலுக்கு அழைத்து செல்லும் நிகழ்வு நடந்தது. மேலும், சில மாவட்டங்களில் இந்த முட்டைகள் பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு வனத்துறையினர் ஒவ்வொரு கடலோர கிராமங்களிலும் ஆமை குஞ்சுகள் பொரிப்பகம் அமைத்து ஆமை முட்டைகளை சேகரித்து அங்கே பாதுகாத்து முட்டைகளில் இருந்து வரப்படும் ஆமை குஞ்சுகளை மீண்டும் கடலுக்குள் அனுப்புவது வாடிக்கை.

ஆனால், மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார மீனவ குப்பங்களை பொருத்தவரை எந்த இடத்திலும் வனத்துறை சார்பாகவோ, மீன்வளத்துறை சார்பாகவோ ஆமை குஞ்சுகள் பொரிப்பகம் அமைக்கவில்லை. இதனால், ஏராளமான ஆமை குஞ்சுகள் இறந்து விடுகின்றன.  இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவ குப்பம் கடற்கரையில் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு ஆமைகள் ஏராளமான முட்டைகளை இட்டுச்சென்றது. முதல், கட்டமாக பொறித்த 50 ஆமை குஞ்சுகளை நேற்று முன்தினம் இரவு ஆமைகள் வந்து கடலுக்கு அழைத்து சென்றன.  

அப்போது, சிறுவர்கள் பலர் ஆமை குஞ்சுகளை கையில் எடுத்து கடலில் விட்டனர். மேலும், மலர் தூவி இந்த ஆமைக்குஞ்சுகள் கடலில் விட்டபோது அவை தத்தி தத்தி கடலில் சென்ற காட்சி பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்தது. இதுகுறித்து, மீனவர்கள் கூறுகையில், ‘மாமல்லபுரம் சுற்றுவட்டார மீனவ குப்பங்களில் ஆமை குஞ்சுகளை பாதுகாத்து கடலில்விட தமிழ்நாடு வனத்துறை மற்றும் மீன் வளத்துத்துறை சார்பாக ஒரு ஆமை குஞ்சுகள் பொரிப்பகம் அமைக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: