கோப்பை அறிமுகத்திற்கு ரோகித்சர்மா வராதது ஏன்?

அகமதாபாத்:16வது சீசன் ஐபிஎல் தொடர் அகமதாபாத்தில் இன்று தொடங்கும் நிலையில் நேற்று சாம்பியன் கோப்பை அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மாவை தவிர மற்ற 9 அணிகளின் கேப்டன்கள் கலந்துகொண்டனர். அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். இதனிடையே சமூக வலைதளங்களில் ரோகித் சர்மா எங்கே என்று பரவலாக கேள்விகள் எழுந்தன. இதனிடையே ரோகித் சர்மாவுக்கு உடல்நலம் சரியில்லை என்றும் அதனால் அகமதாபாத்துக்கு அவர் செல்லவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று முன்தினம் மும்பை பயிற்சியாளர் மார்க் பவுச்சர், செய்தியாளர்கள் சந்திப்பில், வர இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு சில பல ஆட்டங்களில் ஓய்வளிக்கப்படும் என கூறி இருந்தார். அதன்படி அவர் பணி பளுவை குறைக்கும் வகையில் கோப்பை அறிமுகத்தில் பங்கேற்க வில்லை என தெரிகிறது.

Related Stories: