ராகுல்காந்தி விவகாரம்: தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர்போராட்டம்; சென்னை சைதாப்பேட்டையில் தள்ளுமுள்ளு

சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை சாதாரண உடையில் இருந்த காவலர்கள் தாக்கியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒருவர் மயக்கமடைந்தார்.

இதனை கண்டித்தது காங்கிரஸ் கட்சியினர் 3 மணி நேரமாக தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை அடுத்து காவல்துறை உயர் அதிகாரிகளின் சமரசத்தை ஏற்று, காங்கிரஸ் கட்சியினர் களைந்து சென்றனர்.

இதேபோல் சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே ஒன்றிய அரசின் செயலை கண்டித்து மகளிர் காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரத்தில் தமிழ்நாடு மகளிர் காங்கிரசார் தீப்பந்தங்களை ஏற்றி முழக்கங்களை எழுப்பினர். மதுராந்தகம் அருகே மடாலம் மற்றும் சீர்காழி அருகே மகிளா காங்கிரஸ் சார்பில் தீப்பந்தங்களுடன் பேரணி நடைபெற்றது.

திண்டுக்கல் மற்றும் உடுமலை பேட்டையில் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம் நடத்தினர். காட்டுமன்னார் கோவில், அரியலூர, ஈரோடு, கோபிசெட்டிபாளையம், உள்ளிட்ட இடங்களிலும் மகிளா காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: