திருவாடானை அருகே கண்மாயில் இருந்து ஐம்பொன்னால் ஆன திருஞானசம்பந்தர் சிலை கண்டெடுப்பு!

ராமநாதபுரம்: திருவாடானை அருகே கண்மாயில் இருந்து ஐம்பொன்னால் ஆன திருஞானசம்பந்தர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் 3 அடி உயர ஐம்பொன் சிலை மீட்கப்பட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலை 12 அல்லது 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலையாக இருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: