தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகாரிகள் பெயரில் போலி ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்த வழக்கில் 5 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகாரிகள் பெயரில் போலி ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி அரசு முத்திரை ரப்பர் ஸ்டாம்புகள் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவது நகர்ப்புறங்களிலிருந்து, கிராமங்கள் வரை பல இடங்களில் நடைபெற்றுவருகிறது.

அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் போலி ரப்பர் ஸ்டாம்ப்களை பயன்படுத்தி சிஎஸ்ஆர் காப்பி, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருவான வரித்துறை சான்றிதழ் உள்ளிட்ட சான்றுகளையும் தாசில்தார், வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ உள்ளிட்ட பல்வேறு வருவாய் துறை அதிகாரிகளின் போலி முத்திரைகளுடன் கூடிய ரப்பர் ஸ்டாம்ப்களையும் போலியாக செய்து மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து புகார் வரவே தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த மோசடியில் சம்மந்தபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள 4 பேரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

Related Stories: