திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் பங்குனி திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது

குலசேகரம்: திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாள் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இன்று காலை பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக இன்று காலை 5 மணிக்கு ஹரி நாம கீர்த்தனம், 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 9.00 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. தேவசம் தந்தரி சஜித் சங்கர நாராயணரு கொடி ஏற்றிவைத்தார். நிகழ்ச்சியில் தேவசம் கணகாணிப்பாளர் சிவகுமார், கோயில் மேலாளர் மோகன்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் ஆகியன நடக்கிறது. நாளை (28ம் தேதி) காலை 8 மணிக்கு நவநீத நாராயணீய சமிதி வழங்கும் நாராயண பாராயணம், மாலை 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளி நடக்கிறது. 3ம் நாள் (29 ம்தேதி) காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், மாலை 6 மணிக்கு நம்மாழ்வார் குறித்து ஆன்மீக சொற்பொழிவு, இரவு 7.45 மணிக்கு தேவார பஜனை, 9 மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், 10 மணிக்கு பாலி விஜயம் கதகளி ஆகியன நடக்கிறது.

4ம் நாள் (30ம் தேதி) காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், இரவு 7 மணிக்கு சங்கீத நாட்டியம், 9.30 மணிக்கு சுவாமி பல்லக்கில் பவனி வருதல், 10 மணிக்கு நளசரிதம் கதகளி, 5ம் நாள் இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, 7.30 மணிக்கு பரத நாட்டியம், 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்று, தொடர்ந்து கருடவாகனத்தில் சுவாமி பவனி வருதல், கல்யாண சவுகந்திகம் கதகளி ஆகியனவும் நடக்கிறது.

10ம் நாள்(5ம் தேதி) காலை 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், 5.30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி ஆறாட்டுக்கு மூவாற்றுமுகம் ஆற்றுக்கு எழுந்தருளல், கழுவன் திட்டை, தோட்டவாரம் வழியாக சுவாமி ஊர்வலமாக சென்று மூவாற்றுமுகம் ஆற்றில் ஆறாட்டு நிகழ்ச்சி, ஆறாட்டு முடிந்து கோவிலுக்கு சுவாமி திரும்புதல், இரவு 1 மணிக்கு குசேலவிருத்தம் கதகளி ஆகியன நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.

Related Stories: