திருச்செந்தூர் கோயிலில் சண்முகார்ச்சனை கட்டணம் ரூ5 ஆயிரம் ஆனது

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்ட சண்முகார்ச்சனை கட்டணம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டது. பக்தர்கள்ஆன்லைனில் ரூ.5 ஆயிரம் செலுத்தி சண்முகார்ச்சனை செய்தனர். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தினமும் பல்வேறு கட்டளைகள் மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன. இவைகளில் சண்முகார்ச்சனை கட்டளை முக்கியமானது. இதற்கு கட்டணமாக 1995ம் ஆண்டு நவ.8ம்தேதி முதல் ரூ.1500 கோயில் நிர்வாகத்தால் வசூலிக்கப்பட்டது.

தற்போது பூஜை பொருட்கள் விலை உயர்வு காரணமாக சண்முகார்ச்சனை கட்டணத்தை ரூ.1500லிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்த அறங்காவலர் குழு தீர்மானம் இயற்றியது. இதுகுறித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கு ஆட்சேபணை எதுவும் வரவில்லை. இதையடுத்து இன்று (திங்கள்) முதல் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. அதன்படி இன்று காலை பக்தர்கள் ஆன்லைனில் ரூ.5 ஆயிரம் செலுத்தி சண்முகார்ச்சனை செய்தனர்.

Related Stories: