திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதல் டிஜிபி, ஐஜி அதிரடி ஆய்வு

திருவள்ளூர்: கூடுதல் டிஜிபி சங்கர், வடக்கு மண்டல ஐஜி கண்ணன், காஞ்சி சரக டிஐஜி பகலவன் ஆகியோர் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டனர். திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கூடுதல் டிஜிபி சங்கர், வடக்கு மண்டல ஐஜி கண்ணன், காஞ்சி சரக டிஐஜி பகலவன் ஆகியோர் நேற்றிரவு சுமார் 2 மணி நேரம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, குற்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் இரவில் ரோந்து பணியில் இருக்கும் காவலர்கள் முறையாக பணி செய்கிறார்களா என ஆய்வு செய்தனர். பின்னர், இரவு முழுவதும் விழித்திருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினர். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது புகார்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் பற்றி கேட்டறிந்தனர். மேலும் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டனர். ஆய்வின் போது மாவட்ட எஸ்பி பா.சிபாஸ் கல்யாண், ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: