கொரோனா காலத்தில் பரோலில் விடுவிக்கப்பட்ட கைதிகள் சரணடைய வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

கொரோனா காலத்தில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த கைதிகள் 15 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா 2020 – 2021 கால கட்டத்தில் நாட்டில் உள்ள சிறைகளில் நெரிசலை தவிர்க்க குறிப்பிட்ட கைதிகளுக்கு, உயர் அதிகாரிகளின் பரிந்துரையின் படி பரோல் / ஜாமீன் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அப்படி விடுவிக்கப்பட்ட கைதிகள், விரைவில் அந்தந்த நீதிமன்றங்களில் சரண் அடைய வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவை பிறப்பித்துளது.  

இந்த உத்தரவின் படி, 15 நாட்களுக்குள் கொரோனா காலத்தில் பரோல் / ஜாமீனில் வெளியே சென்றோர் சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் எனவும், இதனை மாநில நீதிமன்றங்கள், சிறை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அவர்கள் சரணடைந்த பிறகு, வழக்கம் போல அவர்கள் ஜாமீன் கோரலாம் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories: