ராகுல்காந்திக்கு சிறை தண்டனை வழங்கியதை கண்டித்து காங்கிரசார் திடீர் சாலை மறியல்

திருக்கழுக்குன்றம்: அகில இந்திய காங்கிரஸ்  கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு ஒன்றில் குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. இதனை  கண்டித்து, கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த நிர்வாகி சி.ஆர்.பெருமாள் தலைமை தாங்கினார். நகர தலைவர் நிஜாமுதீன் முன்னிலை வகித்தார்.

அப்போது, ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு திடீரென அருகில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த கல்பாக்கம் போலீசார் மறியலில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்து அங்குள்ள, திருமண மண்டபத்தில் அடைத்தனர். காங்கிரசாரின் இந்த சாலை மறியலால் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: