சின்னமனூர் பகுதியில் புளியம்பழம் அறுவடை பணி தீவிரம்-கூடுதல் மகசூலால் வியாபாரிகள் மகிழ்ச்சி

சின்னமனூர் : சின்னமனூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளில் இருபுறங்களிலும் புளியமரங்கள் அதிகளவு உள்ளன.இம்மரங்களில் காய்க்கும் புளியம் பழங்களை ஆண்டுதோறும் கோடை காலத்திற்கு முன்பே மாவட்ட அதிகாரிகள் ஏலம் விடுவார்கள். இந்தாண்டிற்கான ஏலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் அதிகளவில் வியாபாரிகள் கலந்து கொண்டு, மரங்களை ஏலம் எடுத்தனர். மேலும் நடப்பாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால், புளியமரங்களில் சடை சடையாக புளியம்பழம் தொங்கியது.

தற்போது குத்தகைக்கு எடுத்தவர்கள் அதனை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் நல்ல மகசூல் கிடைத்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், புளியமரத்தோப்பு வைத்திருக்கும் விவசாயிகளும் அதிக மகசூல் கிடைத்திருப்பதால், கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு கிலோ புளி ரூ.120 வீதம், ஒரு குவிண்டாலுக்கு ரூ.11 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை கிடைக்கிறது. நல்ல விலை கிடைப்பதால், குத்தகைக்கு எடுத்த வியாபாரிகள், மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: