பெருகிவரும் குற்றங்களை தடுக்க துப்பாக்கி ஏந்திய மொபைல் டீம் ரோந்து-எஸ்பி துவக்கி வைத்தார்

பெரம்பலூர் : பெரம்பலூர் நகரில் பெருகிவரும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, சிறப்பு ரோந்து பணிக்காக துப்பாக்கி ஏந்திய மொபைல் டீம் ரோந்து பணியை மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி கொடிய சைத்துத் தொடங்கி வைத்தார்.திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் மற்றும் திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமையில், பெரம்பலூர் நகர் மற்றும் அதன் சுற்றி யுள்ள பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் காவல்துறையி னர் 24 மணி நேரமும் சுழற் சி முறையில் ரோந்து பணி யில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதற்காக நேற்று (20ம் தேதி) பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகம் முன்பு, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி, இந்த சிறப்பு ரோந்து காவல் வாகனங்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறப்பு ரோந்து பணிக்காக நிய மிக்கப்பட்டுள்ள போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு ள்ள பகுதிகளில் எந்தவித குற்ற சம்பவங்கள் ஏற்படா மல் ரோந்து பணிபுரிந்தும், சந்தேகப்படும் வகையில் உள்ளவர்கள் பற்றிய தகவ ல்களை சேகரித்தும், நக ரில் பூட்டியுள்ள வீடுகள் மற் றும் அதில் வசித்து வருப வர்களின் தகவல்களை சே கரித்தும், வாகன தணிக் கை செய்தும் குற்ற சம்பவ ங்கள் ஏற்படாத வகையில் திறம்பட செயல்படுவார்கள்.

எனவே பெரம்பலூர் நகரப் பகுதிகளில் வசிக் கும் பொது மக்கள், உங்கள் பகுதியில் ரோந்து அலுவல் மேற்கொள்ளும் காவல் துறையினரின் தொலைபேசி எண்களை பெற்றுக் கொண்டு, தங்கள் பகுதி யில் ஏதேனும் அசம்பாவித ங்கள் ஏற்பட்டால் உங்கள் பகுதியில் ரோந்து அலுவலில் இருக்கும் காவல்து றையினரைத் தொடர்பு கொண்டு பயன்பெறுங்கள் பெரம்பலூர் மாவட்ட தனி ப்பிரிவு அலுவலக தொலை ப்பேசி எண் 9498100690-ஐ எப்போது வேண்டுமானா லும் தொடர்புகொள்ளலாம். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

3 குழுவாக ரோந்து

பெரம்பலூர் நகரில் டவுன் பேட்ரோல் ரோந்து பணியில் காலை 7 மணிமுதல் மநியம் 2 மணிவரை ஒரு டீம், 2 மணிமுதல் இரவு 9 மணிவரை ஒருடீம், இரவு 9 மணிமுதல் காலை 7மணி வரை ஒருடீம் என 3குழு ரோ ந்து பணிகளில் ஈடுபடவுள் ளனர். இதில் ஒரு பைக்கில் ஒரு போலீஸ், ஒரு துப்பாக்கி ஏந்திய ஏட்டு பணியில் இருப்பார்கள்.

Related Stories: