வேதாரண்யத்தில் உப்பு பாத்திகளில் தேங்கிய வெள்ளம்: கோடை மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கோடை மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த 2 வரமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்றது வந்தது. தீடீர் மழையால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கியது. இதனால் உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சேமிக்கபட்டுள்ள உப்பை தார்ப்பாய் கொண்டு உற்பத்தியாளர்கள் மூடி பாதுகாப்பாக வைத்தனர். உப்பு பாத்திகளில் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் அகற்றும் பணி நடைபெறுகிறது.

Related Stories: