×

வாசகர் பகுதி

நன்றி குங்குமம் தோழி

குளிரும் கொய்யாப்பழமும்

*கொய்யாவில் உள்ள தாதுக்கள், நார்ச்சத்துக்கள், புரதம் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

*சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் கொய்யாப்பழம் சாப்பிடலாம்.

*இதில் கார்போஹைட்ரேட் அளவு மிகவும் குறைவு என்பதால், உடல் எடை wகுறைப்புக்கு உதவும்.

*புரதத்திற்கு பசியைத் தூண்டும் ஹார்மோனை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் உண்டு.

கொய்யாப்பழத்தில் புரதம் அதிகமாகவே இருப்பதால் தினமும் சாப்பிட்டு வரலாம்.

*குடலின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் வைட்டமின் பி-க்கு முக்கிய பங்கு இருக்கிறது. கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி1, பி3, பி6 ஆகியவை நிறைந்திருக்கின்றன. அவை செரிமானம் சீராக நடைபெற உதவி செய்வதோடு வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தும்.

*அதிகப்படியான இன்சுலின் தடுப்பு மருந்து உபயோகிக்கும்போது உடல் எடை அதிகரிக்கும். இன்சுலின் செயல்பாடு சீராக நடைபெறுவதற்கு கொய்யாப்பழம் உதவும்.

*கொய்யாப்பழ இலைகளைக் கொண்டு தேனீர் தயாரித்தும் பருகலாம். நீரிழிவு பிரச்னைக்கு நிவாரணம் தரும்.

தொகுப்பு: ச.லெட்சுமி, செங்கோட்டை.

கோவைக்காயின் சேவை


சமையலுக்கு அவசியம் பயன்படுத்த வேண்டிய காயாக கோவைக்காய் விளங்குகிறது. வேலி ஓரங்களில், வயல்வெளிகளில் படர்ந்து இருக்கும் இந்த காயில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

*குளிர்ச்சி தன்மை கொண்ட கோவைக்காயை கூட்டு, குழம்பு மற்றும் பொரியல் செய்து சாப்பிடலாம். மோரில் போட்டு வற்றலாகவும் பயன்படுத்தலாம். இதில் கால்சியம், போலிக் அமிலம் அதிகமுள்ளது.

*கோவைக்காயில் நீர் 92 கிராம், மாவுப்பொருள் 3-0 கிராம், நார் 1.6 கிராம், கொழுப்பு - 0.1 கிராம், போலிக் அமிலம் 59 மி.கிராம், கால்சியம் 40 மி.கிராம், பாஸ்பரஸ் 30 மி.கிராம், இரும்பு 1.5 மி.கிராம், நியாசின் 0.7 மி.கிராம், தயமின் 0.07 மி.கிராம், ரைபோப்ளோவின் 0.08 மி.கிராம், வைட்டமின் சி-15 மி.கிராம், கலோரி 18 எனும் விகிதத்தில் சத்துக்கள் நிறைந்துள்ளன.

*மாதம் மூன்று முறையாவது சமைத்து சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் பலம் பெறும். உடல் சூடு குறையும். சிறுநீர் கோளாறுகளை போக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். சரும நோய்களை நிவர்த்தி செய்யும். வாய்ப்புண்ணை ஆற்றும். சொறி, சிரங்குகளை குணமாக்கும். கண் எரிச்சலை களையும்.

*இதில் உள்ள கசப்புத்தன்மை வாய்ப்புண்ணை விரைவில் ஆற்றும் சக்தி கொண்டது.

*சிறுநீர் வெளியேற்றுவதில் சிரமம் உள்ள குழந்தைகளுக்கு, பிஞ்சு கோவையை வாங்கி பொடியாக நறுக்கி, பாசிப்பருப்புடன் சமைத்து கொடுத்தால், சிறுநீர் பிரச்னை தீரும்.

தொகுப்பு: இந்திராணி, சென்னை.

Tags :
× RELATED வாய்ப்புண்களைப் போக்கும் மணத்தக்காளி கீரை