பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருக்கழுக்குன்றம்:  திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் இருளர் மற்றும் பழங்குடியின பெண் குழந்தைகளுக்கு  விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடந்தது.  திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட புலிக்குன்றம், கொத்திமங்கலம், நடுவக்கரை, புதுப்பட்டிணம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் உள்ள இருளர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த  12 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் அமைப்பு சார்பில் நடந்தது.

இந்நிகழ்ச்சியின்போது இளையபருவமுள்ள இளஞ்சிறார் மற்றும் சிறுமிகளின் தனிநபர் பாதுகாப்பு குறித்தும், மின்சாரம், தீ, கூர்மையான ஆயுதம் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் பொருட்களை பாதுகாப்புடன் பயன்படுத்துவது மற்றும் பெண் குழந்தைகளிடம் நல்ல தொடுதல் மற்றும் பாலியல் நோக்கில் தொடுதல் ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

Related Stories: