மேட்டுப்பாளையம் அருகே பலத்த சூறாவளி காற்றில் 40,000 வாழைகள் நாசம்

மேட்டுப்பாளையம்: கோவை, மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் உள்ள இரும்பறை, இலுப்பநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நேந்திரன், கதளி, பூவன், ரஸ்தாலி, ரோபஸ்டா உள்ளிட்ட பல்வேறு வகை வாழை இனங்களை பல ஆயிரம் ஏக்கர்களில்  பயிரிடப்பட்டுள்ளது.இந்நிலையில், சிறுமுகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான சிட்டேபாளையம், இரும்பறை, அம்மன் புதூர், பால்காரன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசியது.

இதனால், அப்பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து நாசமடைந்துள்ளன. இதுகுறித்து மோதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், சூறாவளியால் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குலைதள்ளிய  வாழைகள் முறிந்து சேதமாகி விட்டன. கடன் பெற்று விவசாயம் செய்தவர்களுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றனர்.

Related Stories: