×

தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை மீண்டும் ஏறுமுகமாக இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. அதே நேரத்தில் சில வாரங்கள் தொடர்ச்சியாக உயர்வதும், அதன் பிறகு சற்று குறைவதுமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை சவரனுக்கு ரூ1,880 வரை உயர்ந்தது. அதே நேரத்தில் தங்கம் விலை சவரன் ரூ.43 ஆயிரத்தை கடந்தது. 14ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.43120க்கு விற்பனையானது. இந்த தொடர் விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது.

இந்நிலையில் 15ம் தேதி தங்கம் விலை பெயளரவுக்கு குறைந்தது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,380க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.43,040க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. மறுநாளே, அதாவது 16ம் தேதி தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியது. 16ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,425க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43400க்கும் விற்கப்பட்டது. மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் நேற்றும் தங்கம் விலை உயர்வை சந்தித்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5450க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,600க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் இப்படியே விலை உயர்ந்தால் சவரன் ரூ.44 ஆயிரத்தை கடந்து விடுமோ என்ற அச்சம் நகை வாங்குவோரிடையே நிலவி வருகிறது.

Tags : Gold prices rebounded, rising by Rs 200 a bar in a single day
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...