மதுபான கொள்முதல் விவரங்களை தர மறுத்த டாஸ்மாக் பொது தகவல் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: டாஸ்மாக்கிற்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை தெரிவிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்முதல் விவரங்களை தர மறுத்த டாஸ்மாக் பொது தகவல் அதிகாரியின் உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்தது. மதுபான கொள்முதல் தொடர்பான விவரங்களை தரலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. மதுபான கொள்முதல் குறித்த விவரங்களை வழங்க மறுத்ததை எதிர்த்து வழக்கறிஞர் லோகநாதன் வழக்கு தொடர்ந்தார்.

டாஸ்மாக்கில் மதுபானம் விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம், ஊழியர்களுக்கான சம்பளம், கடை வாடகை உள்ளிட்ட செலவுகள் குறித்தும், மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு மதுபானங்கள், என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்படுகின்றன? என்பது குறித்த விவரங்களை கேட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த 2015-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தேன்.

மது உற்பத்தி நிறுவங்களிடம் இருந்து எவ்ளவு மதுபானங்கள் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்படுகின்றன என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். கொள்முதல் தொடர்பாக நிறுவனங்களுக்கிடையே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வர்த்தக ரகசியம் என்று அரசு தரப்பில் கூறியுள்ளனர்.

கொள்முதல் குறித்த விவரங்களை வழங்க முடியாது, தகவல்களை வெளியிட்டால் வர்த்தகம் பாதிக்கும் என்று அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.  மனுதாரர் கோரும் விவரம், வணிக ரகசியமாக கருத முடியாது, டாஸ்மாக் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார். லாபமாக பெறப்படும் தொகை அரசு நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதால் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Stories: