ஆதம்பாக்கத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

ஆதம்பாக்கம்: சென்னை ஆதம்பாக்கம் கக்கன் ரோட்டில் ஒரு மணி நேரமாக வெளுத்து வாங்கும் கோடை மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக காலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. இந்நிலையில், தீடிரென கடந்த ஒன்றரை மணி நேரமாக புறநகர் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.

குறிப்பாக ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதிகளில் மழை அதிகளவில் பெய்ததால் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் வேளச்சேரி, தரமணி, மடிப்பாக்கம் மற்றும் பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளிலும் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில் தொடர்ச்சியாக 15 நிமிடங்கள் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் கையில் எடுத்து மகிழ்ந்தனர்.

பிப்ரவரி மாதம் முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இன்று காலை பெய்த திடீர் மழையால் அப்பகுதி முழுவதும் குளிர்ந்த நிலை நிலவுகிறது. அதேபோல் குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர், மாடம்பாக்கம், செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. ஆதம்பாக்கம் மற்றும் வேளச்சேரி பகுதிகளில் பெய்த கனமழையால் சாலையில் ஒரு அடி அளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளது.

Related Stories: