முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் அரசு மருத்துவமனையில் பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: சந்திரன் எம்.எல்.ஏ வழங்கினார்

திருத்தணி: முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த 6 குழந்தைகளுக்கு சந்திரன் எம்எல்ஏ தங்க மோதிரம் அணிவித்தார். திருத்தணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த 6 குழந்தைகளுக்கு  தலைமை செயற்குழு உறுப்பினர்  திருத்தணி எம்.பூபதி ஏற்பாட்டில் மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.  இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ். சந்திரன் கலந்துக்கொண்டு  மார்ச் 1ல் அரசு மருத்துவமனையில் பிறந்த 6 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார்.

இதில், 21வது வார்டுக்கு உட்பட்ட  பெரியார் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நகரமன்ற துணைத் தலைவர்  ஆ.சாமிராஜ் ரூ.1 லட்சம்  செலவில் பெரியார் நகரில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு  ஸ்மார்ட் வகுப்பு ஏற்பாடு செய்து தந்தார்.

மாணவர்கள்  தொழில்நுட்ப உதவியுடன்  கல்வி கற்க அமைக்கப்பட்ட கணினி வசதியுடன்  அமைக்கப்பட்ட  வகுப்பறையை, எஸ். சந்திரன் எம்.எல்.ஏ  திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர்  வி.வினோத்குமார், முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மு.நாகன், முன்னாள் நகர மன்ற துணை தலைவர் ரகுநாதன், நகர துணை செயலாளர் ஜி.எஸ். கணேசன், நகரமன்ற கவுன்சிலர்கள்  அப்துல்லா அசோக்குமார், பிரதாப், பிரேமா சந்திரன், லோகநாதன், மகேஸ்வரி கமலநாதன்  உட்பட  உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் என பலர் கலந்துக்கொண்டனர்.

Related Stories: