இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் 'தமிழ்நாடு அங்கக வேளாண் கொள்கை 2023'யை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழ்நாடு அங்கக வேளாண் கொள்கை 2023யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திடவும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் 2023ம் ஆண்டுக்கான புதிய அங்கக வேளாண் கொள்கையை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.  

குறிப்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் இருபவர்களுக்கான உணவு பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் ஊக்குவிப்பதற்காக தமிழக அரசால் செயல்படுத்தி வரும் முக்கிய திட்டங்கள், முக்கிய அம்சங்கள் இந்த புதிய அங்கக வேளாண் கொள்கையில் இடம்பெற்றுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண்மை உத்திகளை பயன்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உணவுப் பொருள் பாதுகாப்பு, விவசாயம், பல்லுயிர் பாதுகாப்பு, மண்வள பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த கொள்கை வெளியாகியுள்ளதால் இயற்கை வேளாண்மை மற்றும் அதுசார்ந்த பொருட்கள் விற்பனை அடுத்த கட்டத்தை அடையும் என வேளாண்மைத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories: