மணலி மண்டலக்குழு கூட்டத்தில் ரூ.5 கோடி பணிகளுக்கு தீர்மானம்

திருவொற்றியூர்:  சென்னை மாநகராட்சி, மணலி மண்டலக்குழு கூட்டம், மண்டலக்குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் நலப்பணிகள் குறித்து கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்றது.

தொடர்ந்து, மணலிபுதுநகர், இடையஞ்சாவடி மற்றும் அங்குள்ள 35வது தெருவில் உள்ள இரு அங்கன்வாடி மையங்களை இடித்துவிட்டு, ரூ.62 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுதல், வார்டு 16ல் காமராஜர் நகர் பெருமாள்கோயில் குளம், ஆண்டார்குப்பம் வெள்ளாங்குளம் ஆகிய 2 குளங்களையும் ரூ.20.66 லட்சம் செலவில் புனரமைத்தல், சின்ன ஈச்சங்குழி மயான பூமியை ரூ.31 லட்சம் செலவில் மேம்படுத்தும் பணி, இடையஞ்சாவடி பிரதான சாலை மயான பூமியை ரூ.67.34 லட்சம் செலவில் மேம்படுத்தும் பணி உட்பட சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: