சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022 - 23ம் ஆண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கியது. தமிழ் தாள் தேர்வு நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதி வருகின்றனர். முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்காகவும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் தேர்வு விவரங்களை சரிபார்ப்பதற்கும், அடுத்த 3 மணி நேரம் தேர்வை எழுதுவதற்கும் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு முடிகிறது. வரும் புதன்கிழமை ஆங்கில தேர்வு நடைபெறுகிறது.பொதுத்தேர்வை தமிழ்நாட்டில் 8.36 லட்சம் மாணவர்களும், புதுச்சேரியில் 14, 710 மாணவர்களும் எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் 3,185 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 185 தேர்வு மையங்களில் 45,982 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
