தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் 15 ரயில் நிலையங்களை மீண்டும் மேம்படுத்த 'அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின்'கீழ் தேர்தெடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: அம்பத்தூர், அரக்கோணம், செங்கல்பட்டு, சென்னை பீச், கூடுவாஞ்சேரி, கிண்டி, கும்மிடிப்பூண்டி, ஜோலார்பேட்டை, மாம்பலம், சென்னை பூங்கா, பெரம்பூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், சூல்லூர்பேட்டை, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய ரயில் நிலையங்கள் தேர்வு

இத்திட்டத்தின்  கட்டம் 1ன்  கீழ், இந்த 15 ரயில் நிலையங்களும்  மேம்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் கீழ் பயணிகளுக்கு ஏற்ற வசதிகளை மேம்படுத்த ரயில் நிலையங்கள்  ஒவ்வொன்றுக்கும் ₹ 5 முதல் 10 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களின் முக்கியத்துவத்தைப் பொறுத்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.  அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின்  முதல் கட்டத்தின் கீழ் பூர்வாங்க பணிகள் ஏப்ரல் 2023 ல் தொடங்கி இந்த நிதியாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்

இந்த திட்டத்தில் டெண்டர் கோரப்பட்டு 14 ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் . ஏற்பு கடிதங்கள் 15.02.2023 அன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டத்தில் லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் கூடுதலாக அமைக்கப்படவுள்ளது.

மேலும் இரண்டாவது நுழைவுவாயில், கழிப்பறைகள், உட்புறங்கள், காத்திருப்பு அரங்குகள், முகப்பு மற்றும் உயரத்தை மேம்படுத்துதல் போன்றவை மேம்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: