காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்

பெரும்புதூர்:  பெரும்புதூர் ஒன்றியம், தண்டலம் ஊராட்சியில் ஏராளமான பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு, அசாம், ஒடிசா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தண்டலம் பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர். தற்போது, தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இதனை தடுப்பதற்காக, தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில், தமிழகம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில், தண்டலம் ஊராட்சியில், பெரும்புதூர் வட்டார சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இம்முகாமில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சளி, இரும்பல், காய்ச்சல், ரத்த அழுத்தம், சக்கரை நோய் உள்ளிட்ட பரிசோதனை செய்து கொண்டனர்.

Related Stories: